குடியரசு தினம்: சென்னை விமான நிலையத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - மத்திய தொழில் பாதுக்காப்பு படை டி.ஐ.ஜி ஸ்ரீராம்
இந்தியாவின் 73ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் அருகே சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன் தொடர்ச்சியாக பின்னர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி ஸ்ரீராம், சுங்கத்துறை அலுவலர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.