Watch: இப்படி ஒரு சாண்ட்விச்சை பார்த்ததுண்டா? முன்னாள் முதலமைச்சர் வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி! - குஜராத்தில் ஹார்ட் வடிவ சாண்ட்விச் வைரல்
குஜராத்: பாவ்நகர், கோகா சர்க்கிள் அருகே ஹிதேஷ்பாய் தக்கர் என்பவர் 'ஹிதேஷ் சாண்ட்விச்' என்ற கடையை நடத்தி வருகிறார். இவர் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும்வகையில், ஹார்ட் வடிவ சாண்ட்விச் (heart-shape sandwich) தயாரித்து கொடுத்து வருகிறார். பிரெட்டை ஹார்ட் ஷேப்பில் வெட்டி, அதில் சீஸ், ஜாம் தடவி, டெய்ரி மில்க் சாக்லேட் துருவல், சாக்கோபார் ஐஸ்க்ரீம் ஆகியவற்றை சேர்த்து சாண்ட்விச் தயாரிக்கிறார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைப் பார்த்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா வீடியோவைப் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்து, பாராட்டி உள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST