Video: கோவை அருகே பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா - மாரியம்மன் கோவில்
கோவை: சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் கடந்த 8 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊர்ப் பொதுமக்கள் இணைந்து கோயில்களை புனரமைத்தனர். பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி கும்பாபிஷேகம் விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வேள்வி மற்றும் யாகசாலை பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பல்வேறு நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, இன்று காலை சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் சௌந்தரராஜ பட்டாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விக்ரகங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST