KPY Bala: விஜய் ஒரு மலை, நான் சாதாரண இலை... KPY பாலா கலகலப்பு பேச்சு!! - kollywood updates
Published : Sep 5, 2023, 6:10 PM IST
சென்னை:பிரபல தனியார் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்தவர் பாலா. அம்பத்தூரில் அமைந்துள்ள பிரபல கார் ஷோரூமில் புதிய வகை காரை அறிமுகப்படுத்திய நகைச்சுவை நடிகர் K.P.Y பாலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”அடுத்த பிக் பாஸ் சீசன் 7இல் நான் இருக்கிறேன், ஆனால் பார்வையாளராக இருக்கிறேன். காலை உணவு திட்டம் குறித்து கருத்து கேட்டதற்கு கருத்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை நான் வெறும் தூசி தான். ஏசியைப் பற்றி பேச முடியாது என் கூறினார்.
நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ”விஜய் ஒரு மலை. நான் சாதாரண இலை அதனால் அது பற்றி கூற எனக்கு தகுதி கிடையாது. நான் சர்வீஸ் ரோட்டில் ஓடுகிற ஷேர் ஆட்டோ மாதிரி” என நகைச்சுவையாக பதில் அளித்தார். பாலா சமீபத்தில் ஈரோடு மாவட்ட மலை கிராம மக்களுக்கு வென்டிலேட்டருடன் கூடிய ஆம்புலன்ஸை இலவசமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது