திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்: தஞ்சை மேயர் வெளிநடப்பு - திமுக அதிமுக இடையே மோதல்
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம், மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பு கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயர் ராமநாதன் இருக்கையை விட்டு எழுந்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் மற்ற கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க முடியாமல் பாதியிலேயே கூட்டம் முடிந்தது. திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் திமுக மேயர் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநகராட்சி மாமன்ற கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST