மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் திமுகவின் என்.செல்வராஜ் வெற்றி - மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் திமுகவின் என்.செல்வராஜ் வெற்றி
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக - 24 வார்டுகளிலும், காங்கிரஸ் - 1 வார்டிலும், மதிமுக - 1 வார்டிலும், அதிமுக - 7 வார்டுகளிலும் , பாமக - 2 வார்டுகளிலும் என்று வெற்றி பெற்றன. இதன்தொடர்ச்சியாக, (மார்ச் 4) இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லிங்கராஜனைவிட 2 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக நகரச் செயலாளர் குண்டாமணி செல்வராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST