வெள்ளத்தில் மிதக்கும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை - குரோம்பேட்டை அரசு மருத்துவமனை
சென்னையில் கடந்த 5 நாட்களாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் நீர் புகுந்து, மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் நீர் புகுந்துள்ளது. இதனால், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.