தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? - ராமு மணிவண்ணன் சிறப்பு பேட்டி - தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறுவதில் வேகமாக இருப்பவர்கள், தங்கள் வாக்கை செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும், அதிகாரத்தில் இருப்பவர்களை தெரிந்து வைத்திருப்பதனால், ஆட்சியில் யார் இருந்தாலும் தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துகொள்கின்றனர் எனவும், ஏழை மற்றும் சாதாரண நிலையில் உள்ளவர்களை தங்களின் அடிப்படை தேவைகளை செய்து தருபவர்கள் யார் என்பதை அறிந்து வாக்கு செலுத்த ஆர்வமாக வருகின்றனர் எனவும் சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் நிர்வாகவியல் துறை தலைவர் ராமு மணிவண்ணன் நமக்களித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.