அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் முதலமைச்சர் பழனிசாமி!! - tamil nadu cm palanisamy wish
தூத்துக்குடி: நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து சாலை வழியாக நாங்குநேரி சென்ற அவர், பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அதனை முடித்துக்கொண்டு, இன்று காலை தூத்துக்குடியில் இருந்து மீண்டும் சென்னை புறப்பட்டார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்ப முயன்றபோது "அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்" என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.