இசைஞானி பாட்டுக்கு மறுவுருவம் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் - இசைஞானி இளையராஜா
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இசைஞானி இளையராஜா வடிவமைத்த இசையை பயன்படுத்தி, அரசுப்பள்ளியின் பெருமைகளைக் கூறும் பாடல் ஒன்றை குருவராஜப்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் இயற்றியுள்ளார். “சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா” என்ற பாடலின் இசையில், கல்வி வளம் என்றாலே, அது அரசுப் பள்ளிக்கு ஈடாகுமா; என்னாளும் கொண்டாடும், நம் திறமைக்கு இணையாகுமா” என மறுவுருவம் கொடுத்து பெற்றோர்கள், பொதுமக்களை எளிதில் கவரும் வகையில் பாடலை இணைத்து வெளியிட்டுள்ளார்.
TAGGED:
இசைஞானி இளையராஜா