Be careful: யார் ஏரியாக்குள்ள, யாருடா லந்து கொடுக்குறது! - வைரலாகும் யானை துரத்தும் வீடியோ
அமைதியாக முன்னே சென்ற யானையை துரத்தி துரத்தி படம் எடுத்துவிட்டு, அது துரத்த காரை பின்நோக்கி வேகமாக செலுத்தும் இளைஞர் தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. எனினும் இந்த காணொலி எடுக்கப்பட்ட இடம் தொடர்பான உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. நாம் அனைவரும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் சுதந்திரத்தை மதிக்கக் கற்றுக்கொள்வோம். காடுகளில் எந்த ஒரு சாகசத்திற்கும் உரிய இடமில்லை அது வனவிலங்குகளின் வாழ்விடம். வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது அனைவரின் கடமையாகும்.