உலகின் முன்னணி டிஜிடல் சக்தியாக இந்தியாவை மாற்றுவோம் - அம்பானி நம்பிக்கை - பேஸ்புக் ஜியோ ஒப்பந்தம்
ஹைதரபாத்: முகேஷ் அம்பானியின் ரிலையனஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை ரூ.43,574 கோடிக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. உலகின் முன்னணி டிஜிடல் சக்தியாக இந்தியாவை மாற்றுவதே இந்த ஒப்பந்தத்தின் லட்சியம் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். முகேஷ் அம்பானியும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் இணைந்து ஒப்பந்தம் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.