ராமநாதசுவாமி தெப்பத்திருவிழா - பரவசத்துடன் சுவாமியை வழிபட்ட பக்தர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று(ஜன.29) தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 10 மாத கால இடைவெளிக்குப் பிறகு ராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் கோயிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத் தொடர்ந்து, இரவு தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி இருந்தது.