ஐப்பசி பௌவுர்ணமி: வதான்யேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்! - aippasi Full Moon
மயிலாடுதுறை: ஐப்பசி மாதம் பௌவுர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் ஐப்பசி பௌவுர்ணமி தினமான இன்று(அக்.31) மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னம், காய்கறி, பழவகைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும் அப்பம், வடை உள்ளிட்ட பலாகாரங்கள் கொண்டு படையலிடப்பட்டது. சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாதன் அன்னாபிஷேகத்தை செய்து வைத்தார்.