'பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்' - இயக்குநர் கௌதமன் - பாலியல் வன்கொடுமைகள்
பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமி ஜெயப்பிரியா குறித்து இயக்குநர் கௌதமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமியான ஜெயப்பிரியாவை, ராஜா என்கிற ரத்தக் காட்டேரி அந்த பிஞ்சுக் குழந்தையை சிதைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொடூர சம்பவத்தை, ஒரு தந்தையாக ஒரு சகோதரனாக ஒரு மனிதனாக தாங்கிக்கொள்ள முடியாத ரணமான வேதனை என்று தெரிவித்துள்ளார்.