'நன்றி' தெரிவிக்கும் விதமாக தும்பிக்கையை தூக்கிய யானை - Anand Mahindra Tweet
கர்நாடக மாநிலம், சித்தாபூர் அருகே உள்ள அவெரகுண்டா காட்டில் காபி தோட்டத்திற்குள் உணவு தேடி வந்த யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துள்ளது. இது குறித்து காபி தோட்டத்தின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஜேசிபி வாகனம் மூலம் யானை பத்திரமாக மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.