மத்திய கலாசாரத்துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் - கீழடி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்து மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைத்து கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் டெல்லி சென்றுள்ளார். அப்போது அங்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலை சந்தித்த அமைச்சர் அவருக்கு மலர் கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.