சைக்கிளில் உலகத்தை சுற்றிப் பார்க்கும் பெண்! - jyothi rongala
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி ரோங்களா. 2017ஆம் ஆண்டு சைக்கிளில் உலகப் பயணத்தை தொடங்கினார். பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வருடம் இடைவேளைக்கு பின்னர் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் அவரது பயணத்தை மீண்டும் தொடங்கினார். தற்போதுவரை 19 மாநிலங்களை சைக்கிளில் சுற்றியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், யுனியன் பிரதேசத்தையும் சைக்கிளில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பதே அவருடைய கனவு. இந்நிலையில் நாகாலாந்தில் உள்ள ஜோதி அங்கிருந்து பிற இடங்களுக்கு பயணத்தை தொடரவுள்ளார்.