சுக்தி நதியால் மீண்டும் உயிர்ப்பெற்ற 11 கிராமங்கள்! - Sukhdi River of Indore
இந்தூரில் சிம்ரோல் பிராந்தியக் காடுகளைச் சுற்றியுள்ள 11 கிராமங்கள் எழுச்சிப்பெற்ற கதைதான் இது. நூற்றுக்கணக்கான மக்கள் நீருக்காகப் போராடிவந்தனர். வேளாண் நிலம் தரிசாக ஆரம்பித்தது. கால்நடைகள் உணவுக்காகவும், நீருக்காகவும் கிராமங்களைச் சுற்றிவந்தன. பலரும் வேலைதேடி கிராமங்களை விட்டுப் புறப்படத் தொடங்கினர். கடினமான சூழ்நிலையைச் சந்தித்துவந்த கிராமவாசிகளுக்கு, எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது.