எது... எருமையோட விலை ரூ.30 கோடியா... சதர் திருவிழாவில் கவனம்பெறும் ஷாருக் - ஷாருக் எருமை
ஹைதராபாத்தில் நடைபெறும் சதர் திருவிழாவை முன்னிட்டு ஷாருக், லவ் ராணா ஆகிய எருமைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், மூன்றரை வயதான ஷாருக்கின் விலை 30 கோடி ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? ஷாருக் எருமைக்கு மூன்றரை வயது. அதன் எடை 1,800 கிலோ. ஷாருக்கிற்கு காலையிலும், மாலையிலும் 10 லிட்டர் பால் கொடுக்கப்படுகிறது. உணவில் பிஸ்தா, முந்திரி, பாதாம், ஆப்பிள் மற்றும் 40 முட்டைகள் அடங்கும். வழக்கமான நாட்களில் அவற்றின் பராமரிப்புக்கு ரூ.7000 முதல் 8,000 வரை செலவாகும். ஆனால், சதர் பண்டிகையின்போது ஒரு நாளைக்கு ரூ.15,000 வரை செலவிடுகின்றனர். எள் எண்ணெய் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்கின்றனர். காலையில் நடைபயிற்சிக்கும், மாலையில் நீச்சலுக்கும் அழைத்துச் செல்கின்றனர். வாரம் ஒருமுறை, 3,000 ரூபாய் மதிப்புள்ள ஜானி வாக்கர் (முழு பாட்டில்) ஸ்காட்ச் விஸ்கி மதுபானமும் வழங்கப்படுகிறது. ஷாருக்கின் மதிப்பு ரூ. 30 கோடி.
Last Updated : Nov 4, 2021, 7:40 PM IST