ரஜினி படித்த பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்! - ரஜினி ரசிகர்கள்
பெங்களுரூ: 70ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் ரஜினிகாந்த்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், ரஜினிகாந்த் ஆரம்ப கல்வி பயின்ற கர்நாடக மாநிலத்தில் உள்ள கவிபுரம் ஆச்சார்யா பாடசாலை பள்ளியில், அவரது ரசிகர்கள் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.