நகைக்கடைக்குள் புகுந்த பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்! - puducherry district news
புதுச்சேரி வில்லியனூர் ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனியார் நகைக்கடை ஒன்றின் மேற்கூரையில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக்கண்ட கடை ஊழியர்கள் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர் புவியரசன் கடையின் மேற்கூரையில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக மீட்டனர். இதையடுத்து கடைஊழியர்கள் நிம்மதியைடைந்தனர்.