வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி மக்களின் ஆதரவு யாருக்கு? - பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு, கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை புதுச்சேரி மக்களின் பிரதானப் பிரச்னைகளாக உள்ளன. காங்கிரஸ் அரசின் மீது கோபம் இருந்தாலும் மத்திய பாஜக அரசு துணை நிலை ஆளுநர் மூலம் தொடர்ந்து பிரச்னை கொடுத்தது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் தேவையில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டதாகவும் பொதுமக்கள் நினைக்கிறார்கள். என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு ஆதரவாகவும் மக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Last Updated : Mar 21, 2021, 10:58 PM IST