தேர்தலில் போட்டியிடாதது ஏன்... புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பதில்! - புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தில் தங்கள் பலம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் வைத்தீஸ்வரன் கலந்துரையாடினார். அப்போது பேசிய நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித் தலைமை தன்னை தேர்தலில் நிற்க வலியுறுத்தியது. தேர்தலை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளதாலும், தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டியுள்ளதாலும்தான் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்தார். இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நாராயணசாமி.