'வேளாண் சட்டங்களை திணிக்கவில்லை' - பியூஷ் கோயல் - வேளாண் சட்டங்களை திணிக்கவில்லை
டெல்லி: இந்திய உணவுக் கழகம் முன்பை போலவே கொள்முதல் செய்துவருவதாகவும் மூன்று வேளாண் சட்டங்கள் திணிப்பு அல்ல, விவசாயிகளின் விருப்பமே என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சட்டங்களை ஆழமாகப் படிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பிஜு ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பத்ரிஹரி மஹ்தாப் எழுப்பிய கேள்விக்கு, விவசாயிகளுக்கு அதிகளவு வருமானத்தை வழங்குவதற்காக மோடி அரசு நடவடிக்கை எடுத்துவருவதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பதிலளித்தார்.