ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி... துரிதமாக காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. - சிசிடிவி காட்சி
பனாஜி: வாஸ்கோ டா காமா ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயிலில் ஏற முயன்ற பயணி, திடீரென தவறி விழுந்தார். ரயிலுக்கு அடியில் சிக்க இருந்த அந்நபரை, ரயில்வே காவலர் சாதுரியமாக செயல்பட்டு காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரயில்வே காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.