சந்திராபூர் பிளாகரின் வெற்றி கதை! - சந்தன் பிரசாத் சாஹு
நாள்தோறும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வேலைக்காகச் சுற்றிச் சுழல்வதற்குப் பதில், தனித்துவமாக ஏதாவது செய்ய விரும்பியவர் ஒடிசாவின் சந்திராபூரைச் சேர்ந்த சந்தன் பிரசாத் சாஹு. அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமத்தைச் சேர்ந்த அவர், எண்ம முறை சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) உலகில் தனது கால்களைப் பதித்துள்ளார். வலைப்பக்கங்களில் எழுதத் தொடங்கிய அவர், காலப்போக்கில் மிகப்பெரிய இந்தி பிளாகராக வலம்வரத் தொடங்கினார். கணினி அறிவியலில் முதுகலைப் படிப்பை முடித்த பின்னர் உலகின் தலைசிறந்த பிளாகரால் ஊக்கமடைந்து, அதே துறையில் சாதிக்க வேண்டும் என முடிவுசெய்தார். பல அமைப்புகளால் கிடைக்கும் பணத்தைத் தவிர நல்ல வருமானத்தையும் அவரால் ஈட்ட முடிந்தது.