நாவில் உமிழ்நீரைச் சுரக்கவைக்கும் பாபர்ஷா! - Ashok Biswas, Sweet Shop Owner
இனிப்பிற்குப் பெயர்போன மேற்குவங்க மாநிலத்தின் பெயரைக் கேட்டாலே, ரசகுல்லா, சீதாபோக் மிஹிதானா போன்ற பண்டங்களின் பெயர்தான் நினைவுக்கு வரும். இந்த இனிப்புகளின் பட்டியலில் பாபார்ஷா என்ற இனிப்பும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஆனால் அம்மாநிலத்தின் கிர்பை என்ற பகுதியை அறியாதவர்களுக்கு, இந்த பாபர்ஷா இனிப்பு தெரியவாய்ப்பில்லை. எனவே, இந்த இனிப்பின் பிறப்பிடத்திற்குச் சென்று அதன் ருசியான கதையை அறிந்துகொள்ளலாம்.