கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை! - மழை
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்தாண்டு ஒரு வார காலம் தாமதமாகி 7ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் கனமழை பெய்தது. அதே போல் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட பல பகுதியில் மழை பெய்துவருகிறது.