குரங்குகளுக்கு ஓண விருந்தளித்த கேரள சேட்டன்ஸ்! - காணொலி வைரல் - தலைவாழை இலை
கொல்லம்,: மலையாள மக்கள் இன்று திருவோணப்பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தாடை அணிந்தும், வண்ண வணணப் பூக்கோலமிட்டும் கோயில்களில் வழிபாடு மேற்கொண்டுவருகின்றனர். அந்தவகையில், ஓண சத்ய என்றழைக்கப்படும் அறுசுவை உணவை மலையாள மக்கள் உண்டு மகிழ்வர். இந்த நிலையில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தாம்கோட்ட கோயிலில் குரங்குகளுக்கு ஓண விருந்து அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைவாழை இலை விரித்து, சாதம், சாம்பார், பொரியல், அவியல், அப்பளம், இனிப்புகள் உள்ளிட்டவை பரிமாறப்படுகின்றன. குரங்குகளுக்கு இந்த மெகா விருந்தை அரவிந்தாக்ஷன் என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.