மணநாளில் படுகாயமடைந்த பெண் - எந்த எதிர்பார்ப்புமின்றி ஏற்றுக்கொண்ட மணமகன்! - latest national news
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கல்யாண பெண் விபத்தில் சிக்கி படுகாயடைந்தார். இதில் பெண்ணால் படுக்கையை விட்டு எழுந்து நடக்க முடியாத சூழல் இருந்தது. அதனால், திருமணம் நடக்காது எனப் பெண் வீட்டார் நினைத்திருந்த வேளையில், படுக்கையிலிருந்த அப்பெண்ணை மாப்பிள்ளை ஏற்றுக்கொண்டார். உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.