கேரளாவில் இளைஞர் மீது பெண் ஆசிட் வீசிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் வெளியாயின - கேரளாவில் இளைஞர் மீது பெண் ஆசிட் வீசிய விவகாரம்
கேரளா: இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா (36). இவருக்கு முகநூல் மூலம் திருவனந்தபுரம் பூஜாபுரத்தை சேர்ந்த அருண்குமார்(27) என்பவர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடையில் காதலாக மாறி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் ஷீபா திருமணமானவர், அதை மறைத்து தன்னிடம் பேசி வந்ததை அறிந்த அருண்குமார் ஷீபாவிடம் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார். திருமணம் செய்து கொள்ள வேறு பெண் பார்த்து வந்ததாகவும் தெரிகிறது. இதையறிந்த ஷீபா அருணை கடந்த 16 ஆம் தேதி அடிமாலி வரச்சொல்லி, தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண் மீது வீசியுள்ளார், படுகாயமடைந்த அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஷீபாவின் உடலிலும் ஆசிட் பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீச்சால் அருணின் ஒரு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஷீபாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
TAGGED:
Kerala Woman arrested