கர்நாடக கார்வார் கறுப்பு கடற்கரை! - திலமதி கடற்கரை
காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று இளசுகளும், ஓய்வை தேடி மூத்தவர்களும் கடற்கரைக்கு செல்வார்கள். பெரும்பாலான கடலின் வண்ணம் நீலம் என்றாலும், கடற்கரையின் மணலோ வெண்மையாகவே காணப்படும். ஆனால் இந்த ஆழியில் காணும் இடமெங்கிலும் கறுப்பு மணல்தான். ரம்மியமான தழுவல் காற்றும், கண்ணின் இமை நிற கறுகறு மணலும் சுற்றுலாப் பயணிகளை மதிமயங்க செய்யும். இக்கடல், கன்னட மாநிலம் கார்வார் மாவட்டத்தில் உள்ளது. திலமதி கடற்கரையின் சுவாரஸ்யம் என்னவென்றால், இதன் இடப்புறம் மஜாலி கடற்கரையும் வலதுபுறம் போலம் கடற்கரையும் அமைந்துள்ளன. கோவா எல்லையில் உள்ள இக்கடற்கரைகளின் மணல்கள் வெண்மை. திலமதி மட்டுமே கறுப்பு வைரமாய் மினுமினுக்கிறது. இந்தக் கார்வார் கறுப்பு கடற்கரை குறித்து பார்க்கலாம்.