கார்கிலை வென்றவர்களுக்கு வீர வணக்கம்! - கார்கில் போர்
கார்கில் போர் நடைபெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாட்டிற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு பலரும் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சகம், ராணுவ வீரர்களுக்காக இந்த வீடியோ தொகுப்பினை வெளியிட்டுள்ளது.