தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இரண்டாவது மாடில பேய் இருக்கா... 700 ஆண்டுகளாகத் தீராத மர்மம்! - 700 ஆண்டுகளாகத் தீராத மர்மம்

By

Published : Mar 18, 2021, 7:14 AM IST

அமானுஷ்யக் கதைகளுக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் இருக்கிறது உர்சார் கிராமம். கடந்த 700 ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் வீட்டில் இரண்டாவது மாடி கட்டுவதில்லை. மீறி கட்டினால் அங்கு அமானுஷ்ய செயல்கள் நடப்பதாகக் கூறுகின்றனர். வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போமியா எனும் நபரின் கொலையை அடுத்து, அவரது மனைவி கிராம மக்கள் அனைவரையும் சபித்துள்ளார். இதற்கு பயந்தே ஒருவரும் இங்கு இரண்டாவது மாடி கட்டுவதில்லையாம். போமியா குறித்துச் சொல்லப்படும் கதை உண்மையா, கற்பனையா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், கிராம மக்கள் பயம், மூடநம்பிக்கைகள், புராணக் கதைகளில் சிக்கிக்கொண்டு, சாபம் தான் தங்களுக்கு விதிக்கப்பட்ட பாரம்பரியம் எனக் கருதி வாழ்ந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details