போக்குவரத்து பாதிப்பு - வயல் வழியாக விமான நிலையம் நடந்து சென்ற ஊழியர்கள் - இண்டிகோ விமான ஊழியர்கள்
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி டிசம்பர் 8ஆம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. இந்த பாரத் பந்த் போராட்டத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு காரணமாக சண்டிகர் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இண்டிகோ விமான ஊழியர்கள், கோதுமை வயல் வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மொகாலி விமான நிலையத்தை அடைந்தனர்.