வீடியோ: போலீஸிடம் இருந்து தப்பிக்க, தன்னைத் தானே சுட்டுக்கொண்ட குற்றவாளி - வைரல் வீடியோ
பிவானி (ஹரியானா): குற்றவாளி ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது, தன் கள்ளத் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொள்வேன் என மிரட்டினார். தொடர்ந்து தனது வயிறு, கால் பகுதியில் மூன்று முறை சுட்டு காயமடைந்தார். உடனடியாக அவரை சுற்றிவளைத்து பிடித்த காவல் துறையினர், குற்றவாளியிடம் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.