மரித்துப்போன மனிதம்: பழங்குடியின பெண் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய உறவினர்கள்! - குஜராத் மூதாட்டி தாக்குதல்
காந்திநகர்: குஜராத் மாநிலம், தாஹோட் மாவட்டத்தில், 50 வயது பழங்குடியின பெண் ஒருவரை அவரது உறவினர்கள் கொடூரமாகத் தாக்கும் காணொலி சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.