1200 கிலோ பூக்கோலம்... கேரளாவை அலங்கரிக்கும் ஓணம்! - ஓணம் பண்டிகை
கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். வீடு, கோயில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பூக்களினால் கோலமிட்டு, பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவர். இந்நிலையில் திரிச்சூரில் 1200 கிலோ பூக்களால் பிரமாண்ட கோலத்தை உருவாக்கியுள்ளனர். இக்கோலத்தை உருவாக்குவதற்கு 100 பேர் வேலை பார்த்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் இக்கோலம் பூக்கோலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான காணொலி...