சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்..! காணொளி... - Birthday celebration
கிழக்கு கோதாவரி மாவட்ட மண்டபேட்டாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நண்பர்களுடன் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும்போது, நண்பர்கள் அனைவரும் இளைஞன் மீது நுரையைப் பீச்சி அடிக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கேக்கில் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியின் தீ, இளைஞன் முகத்திலிருந்த நுரையில் பற்றிக்கொண்டது. நண்பர்கள் அனைவரும் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்து, இளைஞனைக் காப்பாற்றியுள்ளனர். இக்காணொளியானது தற்போது இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.