தன்னம்பிக்கையால் போராடி விதியை வென்ற மனிதர்கள்! - Roja
பல ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் கைகளைத் தொட யாரும் துணியவில்லை. அவர்கள் பிச்சை மட்டுமே பெறும் திறன் கொண்டவர்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இன்று, அதே கைகளால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது அவர்களால் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடிகிறது. ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டு, சமூகத்தால் மரியாதை குறைவாக நடத்தப்பட்டு வாழ்வாதாரத்திற்காக போராடி விதியை எதிர்த்து வென்ற அவர்களின் வாழ்க்கை பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.