கண்ணீர் வராமல் அழுவது எப்படி - டெமோ காட்டிய சமாஜ்வாதி தலைவர்!
சமாஜ்வாதி கட்சியின் மூத்த அரசியல்வாதி ஃபெரோஸ் கான் காந்தியின் 150ஆவது பிறந்தநாளை தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள காந்தி சிலை அருகே சுத்தம் செய்தார். மேலும் சிலைக்கு கீழே அமர்ந்து ஃபெரோஸ் கான் கதறி அழுகும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் மட்டுமல்லாது, அவருடன் வந்த தொண்டர்களும் அழுததால், இவர்களின் நடிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.