1971 போரின் 50ஆவது நினைவு தினம்...விமானப் படையின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்!
கடந்த 1971ஆம் ஆண்டு, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் நிகழ்ந்து இந்தியா வெற்றிபெற்றதன் விளைவாக வங்கதேசம் உருவானது. இந்த போர் நிகழ்ந்து 50ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக கோயம்புத்தூர் சூலூரில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அனுபவம் வாய்ந்த விமானிகளின் கண்கவர் சாகசத்தை கண்டு அங்கிருந்து பள்ளி மாணவர்கள் வியப்படைந்தனர்.