காங்கிரசின் 136வது நிறுவன தினம்! - குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி கொடி ஏற்றிவைத்தார். இவ்விழாவில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பவன் பன்சல், கே.சி.வேனுகோபால், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.