சிவனின் சீற்றத்தால் விநாயகரின் தலை விழுந்த இடம்! - உத்தரகாண்ட்
பாடல் புவனேஸ்வரர் குகை உத்தரகாண்ட் மாநிலம் பித்தோகர் மாவட்டம் கங்கோலிஹாத் தாலுகாவில் அமைந்துள்ளது. இங்குதான் விநாயகரின் உண்மையான தலை உள்ளதாக நம்பப்படுகிறது. அவர் தலைக்கு மேல் அமைந்துள்ள பிரம்ம கமலத்திலிருந்து புனித நீர் விழுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தக் குகை, 160 மீட்டர் உயரமும், 90 மீட்டர் ஆழமும் கொண்டது.