இயற்கை விவசாயத்தில் ஸ்ட்ராபெரி பயிரிட்டு கலக்கும் விவசாயி! - தர்பூசணி
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள குஹதாவில் நிலவளம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக ஹர்தேவ் சிங் எனும் விவசாயி இயற்கை விவசாய முறையில் ஸ்ட்ராபெரி பயிர் செய்து சாதித்துக் காட்டியிருக்கிறார். இவர் சாகுபடி செய்யும் ஸ்ட்ராபெரி பஞ்சாப் மாநிலம் முழுவதும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிரக்கோலி, கேரட், முட்டைக்கோஸ், தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட 24 வகை காய்கறி, பழங்களையும் பயிரிட்டு அசத்தி வருகிறார். முறையான பயிற்சி, விடாமுயற்சி இருந்தால் சுற்றுச்சூழலைக் காக்கும் இயற்கை விவசாய முறையில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு ஹர்தேவ் சிங்கே மிகச்சிறந்த சான்று.
Last Updated : Mar 15, 2021, 9:04 AM IST