படுகாயங்களுடன் கரை ஒதுங்கிய 40 அடி திமிங்கலம் - பூரி கடற்கரையில் 40 அடி திமிங்கலம்
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் 40 அடி ராட்சத திமிங்கலம் படுகாயங்களுடன் இன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து உள்ளூர் மீனவர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் திமிங்கலம் உயிரிழந்தது. இதையடுத்து உடலை மீட்ட வனத்துறையினர் உடற்கூராய்வை தொடங்கினர்.