சிறுவன் மீது ஏறிய டிராக்டர்: அதிர்ச்சி காணொலி - ராஜஸ்தான் டிராக்டர்
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் விஷ்ணு காலனி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகத் தண்ணீர் டேங்கர் ஒன்று வந்துகொண்டிருந்தது. இதைக் கவனிக்காத சிறுவன், திடீரென டிராக்டர் குறுக்கே வந்துவிட்டான். சிறுவனைப் பார்த்ததும் ஓட்டுநர் அவசரமாக பிரேக் அடித்தார். இருப்பினும், சிறுவன் மீது டிராக்டர் ஏறிய பிறகே நின்றது. டயரில் சிக்கிக்கொண்ட சிறுவன், சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினான்.