புவனக்காட்டின் உண்மைக் கதை...
கேரளாவின் அகத்தியர் மலைத்தொடரில் அமைந்துள்ள அழகிய பள்ளத்தாக்கு புவனக்காடு. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய பகுதியான இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி! இம்மலைத் தொடரிலுள்ள அகத்தியர் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 1,868 அடி உயரத்தில் அமைந்துள்ளது. காணும் இடமெல்லாம் ஓங்கி உயர்ந்த மலைகளும், பெரும் பள்ளத்தாக்குகளும் சுற்றுலாப் பயணிகளின் உள்ளத்தில் ஆனந்தத்தை அதிகரிக்கும். ஆனால் புவனக்காட்டின் உண்மைக் கதையோ துன்பமும், துயரமும் நிறைந்தது.