விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை மீட்ட விமானப் படையினர்! - விமானப் படை ஹெலிகாப்டர்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள சஹஸ்ரதாரா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், ஒன்று கேதர்நாத் பகுதியில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. அதிலிருந்த ஆறு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17 வி5 ஹெலிகாப்டர் மூலம் சேதமடைந்த ஹெலிகாப்டரை மீட்டு பள்ளத்தாக்கு பகுதிக்கு விமானப்படையினர் கொண்டு சென்றனர். இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் சேதமடைந்த ஹெலிகாப்டரை மீட்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.